உவம உருபு இடைச்சொற்கள்
இரு பொருள்களுக்கு இடையே ஒப்புமையை உணர்த்துவதற்காக உவமானத்திற்கும் உவமேயத்திற்கும் இடையில் வரும் இடைச்சொல்லை உவம உருபு என்று கூறுகிறோம். போல, போன்ற, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர், நிகர், அன்ன, இன்ன போன்ற சொற்களே உவம உருபுகள் எனப்படும்.
ஒப்பிடப் பயன்படும் பொருள்: உவமானம்
ஒப்பிடப்படும் பொருள்: உவமேயம்
உவம உருபு எடுத்துக்காட்டு:
பால் போன்ற நிலா:
நிலா:உவமேயம்

பால்:உவமானம்

போன்ற:உவமை உருபு
போலப் புரைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே
நன்னூல் சூத்திரம் #367