Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

விகுதி இடைச்சொற்கள்

பகுபதத்தில் கடைசியில் நிற்கும் உறுப்பு விகுதி ஆகும். இதனை இறுதிநிலை என்றும் கூறுவர். நன்னூல் இதனை 37 விகுதிகளாக தொகுத்துக் கூறுகின்றது.

Image

ஒரு வினைச் சொல்லைப் பிரித்தெழுதினால் முதலில்  இருப்பது பகுதி. (அதனால் பகுதியை முதல் நிலை என்பர். விகுதி எப்போதும் சொல்லின் இறுதியில் இருக்கும். அதனால் அதனை இறுதி நிலை என்பர். பகுதி, விகுதியாகிய முதல் நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையில் இருப்பது இடைநிலை ஆகும். வினைச்சொல்லின் விகுதி பால், இடம் முதலியவற்றை உணர்த்தும் இடைச்சொல்லாகும்.

வினை விகுதி எடுத்துக்காட்டு:

வினைப் பகுபதம்: செய்தான்

                                     செய்+த்+ஆன்

                         இதில் செய் - பகுதி

                                             த் - இடைநிலை

                                      ஆன் - விகுதி

முதல் நிலை (பகுதி) - வினையை (செயலை)க் காட்டும்

இடைநிலை - காலத்தைக் காட்டும்

இறுதி நிலை (விகுதி) - திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டும் 

செய்தேன் 

  செய்  + ஏன் 

தன்மை, ஒருமை

செய்தோம்

செய் + ஓம்

தன்மை, பன்மை

செய்தாய்

செய் + ஆய்

முன்னிலை, ஒருமை

செய்தீர்கள் 

செய் + ஈர் + கள்

முன்னிலை, பன்மை

செய்தேன் என்ற வினைச்சொல்லில்  “ஏன்” என்ற விகுதியால் செயலைச் செய்தவன் நான்  என்பதனால்  தன்மை என்பதையும் நான் ஒருமை  என்பதையும் குறிப்பதைக் காணலாம்.

Image

மூவிடப் பெயர்கள்

Image

This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org