இடைச்சொல்
தமிழ் இலக்கணத்தில் நான்கு சொல்வகைகள் உண்டு.

இவை தவிர இலக்கிய வழக்கில் மேலும் நான்கு வகைகள் உண்டு .

பெயர்ச்சொல், வினைச்சொல் இவற்றை இடமாகக் கொண்டு, அவற்றைச் சார்ந்து வருகின்ற இடைச்சொல், உரிச்சொல் குறித்து இனி விரிவாகப் பார்க்கலாம்.
இடைச்சொல் என்றால் எ ன்ன?
பெயர்ச்சொல்லிற்கும் வினைச்சொல்லிற்கும் இடையில் அல்லது முன்னும் பின்னும் இருந்து பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் எனப்படும்.
இவை தனித்திருந்து பொருள்தராது.

இடைச்சொற்கள் எட்டு வகைப்படும். அவையாவன:
இடைச் சொல்லின் பொது இலக்கணம்:
வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசைநிலை
குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத்து
ஒன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல்
நன்னூல் சூத்திரம் #419