Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

வேற்றுமை உறுப்புகள்

வேற்றுமைவகைகள் 8 வகைப்படும். வேற்றுமை உருபுகள் 6 வகைப்படும்.

  • முதல் வேற்றுமை பெயர் வேற்றுமை எனப்படும். இவ்வேற்றுமை உருபு எதுவும் ஏற்காது.

  • எட்டாம் வேற்றுமை விளித்தல் (அழைத்தல்) பொருளில் வருவதால் விளிவேற்றுமை என்று கூறப்படும். இவ்வேற்றுமை உருபு எதுவும் ஏற்காது.ும். இவ்வேற்றுமை உருபு எதுவும் ஏற்காது.

வேற்றுமை வகைகள்

உருபுகள்

சொல்லுருபு: சில வாக்கியங்களில், உருபிற்குப் பதிலாக சொல்லுருபைப் பயன்படுத்துவர்.

பொருள்

எ+கா

முதலாம் வேற்றுமை = எழுவாய் வேற்றுமை

/

/

எழுவாய்

இரண்டாம் வேற்றுமை = செயப்பாட்டுபொருள்

ஆக்கல், அழித்தல், நீத்தல், ஒத்தல், உடைமை

படத்தை வரைந்தான். வீட்டை இடித்தான். நாட்டை விட்டுச் சென்றனர். புலியைப் போன்ற வீரம். செல்வம் உடையவன்.

மூன்றாம் வேற்றுமை

ஆல்,ஆன்,ஓடு,ஒடு

கொண்டு, உடன்

கருத்தா = வினை செய்பவனைக் குறிக்கும், கருவி, உடனிகழ்ச்சி

ஓவியரால் படம் வரையப்பட்டது. கத்தியால் வெட்டினான். குழந்தை தாயோடு பள்ளி சென்றது.

நான்காம் வேற்றுமை

கு

ஆக, என்று, நிமித்தம்

கோடல்(ஏற்றல்), பகை, நட்பு, தகுதி, முதற்காரணம், நிமித்தற்காரணம், முறை

முலைக்கு தேர் கொடுத்தான் பாரி. வலிக்கு மருந்து மாறனுக்கு நண்பன் சேரன். மாதனுக்கு சிறப்பு மாந்தநேயம். பள்ளிக்கு நூல் வாங்கினான். மக்களின் உரிமைக்கு போராடினர். தாய்க்கு மகள்

ஐந்தாம் வேற்றுமை

இல் இன்

இருந்து நின்று

நீங்கல் ஏது ஒப்பு எல்லை

பள்ளியிருந்து விலகினான். அறிவில் சிறந்தவன் ஆசான். கண்ணனில் சேரன் நல்லவன். கிளிநொச்சியின்மேற்கே மன்னார் உள்ளது.

ஆறாம் வேற்றுமை

அது இன்

உடைய

உடைமை

சேரனின் நூல் அவனது கை

ஏழாம் வேற்றுமை

கண் இல்

இடம்

ஊரின் கண் கோவில்

எட்டாம் வேற்றுமை

விளி

மன்னா!வாழ்க!

குறிப்பு : ‘இல்’ என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையில் வந்துள்ளதை அறிவீர்கள். ஐந்தாம் வேற்றுமையில் ‘இல்’ என்னும் உருபு ஒப்புப்பொருளிலும், ஏதுப்பொருளிலும் வந்துள்ளது.

ஏழாம் வேற்றுமையில் ‘இல்’என்னும் உருபு இடப்பொருளாகவே வரும்.


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org