Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

காலம்

காலம் செயல் நிகழும் பொழுதைக் குறிக்கும்.

தமிழில் காலம் மூன்று வகைப்படும். அவை இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம். இறந்தகாலம் நடந்து முடிந்ததைக் குறிக்கும்,

நிகழ்காலம் தற்போது நடப்பதையும், எதிர்காலம் இனி நடக்கப் போவதையும் குறிக்கும்.

இறந்தகால இடைநிலைகள் ட், த், ற், இன் என்பனவாகும்.

 எ.கா.: உண்டான் = உண் + ட் + ஆன்

    செய்தான் = செய் + த் + ஆன்

    கற்றான் = கல் + ற் + ஆன்

    ஓடின = ஓடு + இன் + அ

    உறங்கினாள் = உறங்கு + இன் + ஆள்

 

 

நிகழ்கால இடைநிலைகள் கிறு, கின்று ஆகும். 

ஒருமை என்றால் கிறு என்ற இடைநிலையும், பன்மை என்றால் கின்று என்ற இடைநிலையும் இடம்பெறும்.

எ.கா.: செய்கிறான் = செய் + கிறு + ஆன்

  செய்கின்றனர் = செய் + கின்று + அன் + அர்

 

எதிர்கால இடைநிலைகள் ப், வ் ஆகும்.

எ.கா.: உண்டாள் = உண் + ட் + ஆள்

 செய்வான் = செய் + வ் + ஆன்

எதிர்காலத்தைக் குறிக்கும் இன்னொரு வடிவம் உம் விகுதி ஆகும்.  இது வினைச்சொல்லின் பகுதியோடு இணைந்து எதிர்காலத்தைக் காட்டும். 

எ.கா.: விளையாடும் = விளையாடு + உம்

Image

This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org