Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

எண்

எண் என்பது உயர்திணையிலும், அஃறிணையிலும் உள்ள சொற்களின்  எண்ணிக்கையைக் குறிப்பது ஆகும். இது இரண்டு வகைப்படும். ஏதேனும் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை எனப்படும். பொருள்களில் பலவற்றைக் குறிப்பது பன்மை எனப்படும். 

இங்கு இடம்பெற்ற எடுத்துக்காட்டில் ஒரு பொருளைக் குறிப்பது செடி, பலவற்றைக் குறிப்பதால் "கள்" என்ற விகுதி புணர்ந்து செடிகள் என்று பன்மை எடுத்துக்காட்டு வந்துள்ளது.

எடுத்�துக்காட்டு

பொதுவாக ஒருமை வடிவத்தோடு "கள்" விகுதி புணர்வதால் பன்மை வடிவத்தைப் பெறலாம்.

எ.கா.: சங்கு  + கள் = சங்குகள்

பூனை + கள் = பூனைகள்

 

மகர ஈற்றுச் சொற்கள், அதாவது ம் என்ற எழுத்தில் முடியும் சொற்கள், பன்மையாகும் பொழுது ம் என்ற எழுத்து  ங் ஆக மாறும்.

எ.கா.: சங்கம் + கள் = சங்கங்கள்

      இடம் + கள் = இடங்கள்

 

குறில் எழுத்துடன் தொடங்கி "ல்" என்ற எழுத்தில் நிறைவுபெறும் ஈரெழுத்துச் சொற்கள், அதாவது இரண்டு எழுத்துகளைக் கொண்ட சொற்கள், பன்மையாகும் பொழுது "ல்" என்ற எழுத்து "ற்" ஆக மாறும்.

எ.கா.: பல்+கள் = பற்கள்

   கல்+கள் = கற்கள்

ஒரு எழுத்தைக் கொண்ட சொற்கள், பன்மையாகும் பொழுது "கள்" விகுதிக்கு முன் "க்" என்ற மெய் தோன்றும்.

எ.கா.: பூ+ கள் = பூக்கள்

   ஈ + கள் = ஈக்கள்

மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளை தவிர்த்து வேறு சில பன்மை வடிவங்களையும் தமிழ் இலக்கணத்தில் காணலாம்:

எ.கா.: அது: அவை என மாறும் 

   இது: இவை என மாறும்


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org